அதிமுக குழப்பம் முடிவுக்கு வருமா ? பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
அதிமுக பொதுக்குழு வழக்கு
சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டமும் தீர்மான்மும் செல்லாது என்று ஓ.பிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது , இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.
மீண்டும் விசாரணை
இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான வாதங்கள் ஏற்கனவே நடைபெற்றன. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 2 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தேர்தல் ஆணையத்தையும் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று இடையீட்டு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார்.
இதனால், இன்றைய வாதத்தின்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.