அதிமுக பொதுக்குழு செல்லும் : தீர்ப்பின் முழு விவரம்
ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன் தீர்ப்பளித்திருந்தது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பின் முழு விவரம் உங்களுக்காக :
தீர்ப்பின் சுருக்கம்
பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி ப்ழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும்.
ஒற்றை தலைமையின் நோக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளது. அதிமுக சட்ட விதிகளின் படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்ற வாதம் ஏற்கப்பட்டது என கூறினார்.

தனி நீதிபதி உத்தரவு ரத்தானதால் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படுகின்றன.
இதனால் ஓ பன்னீர்செல்வத்தை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி நீக்கியது செல்லும். எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது செல்லும்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லோரும் நீக்கப்பட்டது செல்லும். பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் அறிவித்ததால், தேர்தல் ஆணையம் இதை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.