ஆகஸ்ட் 4ல் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Aug 02, 2022 01:15 PM GMT
Report

அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு

ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ல்  அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை | Aiadmk General Committee Case On August 4

அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரிக்க உள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இதுபோன்று உட்கட்சி தேர்தலுக்கு எதிரான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி வழக்குகள் ஆகஸ்ட் 16-ல் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.