செக் வைத்த ஓபிஎஸ் தட்டி தூக்கிய ஈபிஎஸ் : அதிமுக பொதுக்குழு செல்லும் நீதிமன்றம் உத்தரவு

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Sep 02, 2022 05:24 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

செக் வைத்த ஓபிஎஸ் தட்டி தூக்கிய ஈபிஎஸ் : அதிமுக பொதுக்குழு செல்லும்  நீதிமன்றம் உத்தரவு | Aiadmk General Committee Appeal Case

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அதிமுக பொதுக்குழு குறித்த தீர்ப்பினை வழங்கினர் அதன்படி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவாக பார்க்கப்படுகிறது, இதனால் அதிமுகவில் ஒற்றை தலைமை தொடரும் என்று கூறுகின்றனர் ஈபிஎஸ் தரப்பினர்.