எங்களை டச் பண்ணாதீங்க; அதிமுக தலைமையில் தான் பாஜக - அண்ணாமலையை எச்சரித்த ஜெயக்குமார்
அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் பாஜக உள்ளது என ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
திமுக ஊழல் கட்சி
விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268 ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினரின் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம். தமிழகத்துக்கு இரண்டு புள்ளி ஐந்து லட்சம் கோடி ரூபாயை கடனாக ஏற்படுத்திவிட்டு,
ஜெயக்குமார் பதில்
அரசுக்கு வர வேண்டிய வருவாய் திமுகவினர் ஒவ்வொருவரும் சொத்து சேர்த்து வைத்திருக்கின்றனர். திமுக ஒரு ஊழல் கட்சி என்பதை ஆரம்பத்தில் இருந்தே அதிமுக சொல்லி வருகிறது. அதிமுகவினரின் சொத்து பட்டியல் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
அவற்றை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் பாஜக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.