அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

ADMK AIADMK Chennai
By Thahir Dec 15, 2022 04:56 PM GMT
Report

அதிமுகவின் 100 அடி உயர கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அதிமுக தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

ஒருவர் உயிரிழப்பு

சென்னையை அடுத்து மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை கழற்றி மாட்டும் போது, கம்பம் தவறி விழுந்ததில் அதிமுகவைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் உயிரிழந்தார்.

அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு | Aiadmk Flagpole Falls One Killed

மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்த 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றியபோது விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில், 100 அடி உயர கம்பத்தின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.