தொகுதிகளை இறுதி செய்ய தீவிரம் காட்டும் அதிமுக
அதிமுக வேட்பாளராகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து அதிமுக மற்றும் த.மா.கா இடையேயான பேச்சு வார்த்தை சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தையில் த.மா.கா மொத்தம் 12 தொகுதிகள் வரையில் கேட்டதகவும்,பேச்சுவார்த்தையின் இறுதியில் மொத்தம் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெருந்தலைவர் கூட்டணி 3 தொகுதிகள் கேட்டதகவும் அதற்கு ஒரு இடமும் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மற்ற கட்சிகளான புரட்சி பாரதம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தலா ஒன்று மற்றும் மூன்று தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.