‘‘மிரட்டலுக்கு பயந்து காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல’’: மு.க.ஸ்டாலின் ட்வீட்

dmk bjp stalin aiadmk
By Jon Apr 02, 2021 06:56 PM GMT
Report

திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான வீடுகளில் ஐடி ரெய்டு நடக்கும் நிலையில்.இணையத்தில் திமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகம் இது என்று புகார் வைத்துள்ளனர். இந்த நிலையில் சபரீசனுக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 2 மமணிநேரமாக் தீவிரமாக சோதனை நடந்து வருகிறது.நேற்று இரவுதான் ஸ்டாலின் கொளத்தூரில் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் ரெய்டு நடக்கிறது. தேர்தல் நேரத்தில் திமுகவை மிரட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி சோதனையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் திமுக இதற்கெல்லாம் அடிபணியாது.

திமுக இதுபோன்ற அதிகாரத்தை கண்டு அஞ்சாது என்று திமுகவினர் பலர் இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் இந்த ரெய்டுக்கு எதிராக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் திமுக கூட்டணி கட்சியில் இருக்கும் தலைவர்களும் இந்த ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், இது போன்ற ரெய்டு மூலம் எங்களை ஒடுக்க முடியாது என கூறி வருகின்றனர் திமுகவினர். விஜய் மாதிரி ஸ்டாலினுக்கும் இந்த ரெய்டு சாதகமாகவே செல்ல போகிறது. ஸ்டாலினும் இன்று பிரச்சாரத்தில் விஜய் ஸ்டைலில் ரெய்டுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில்:

மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி என்ற நிலை வரும் பயத்தால் பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல . அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்!உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர் என கூறியுள்ளார்.