அதிமுகவில் பரபரப்பு .. முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் நீக்கம்!

admk nilofarkapil
By Irumporai May 21, 2021 02:06 PM GMT
Report

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

கழகத்தின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்.

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் நீலோபர் கபீல், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.