மைத்துனரின் சத்தமில்லாமல் செய்த கிரவுண்ட் ஒர்க் - சிக்கலில் மாஜி அமைச்சர்!
நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், அதிமுக நிர்வாகியுமான கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ₹3.5 கோடி டெண்டர் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி சேர்ந்த கண்ணன் என்பவர் அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் ஆவார்.
இவர் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ₹3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக கண்ணன் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
டெண்டர்
இந்த சம்பவம் தொடர்nபாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி விசாரணை மேற்கொண்டார் .அப்போது அதிமுக நிர்வாகியுமான கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ₹3.5 கோடி டெண்டர் ஒதுக்கியது தெரியவந்தது .
இதற்கு உடந்தையாக செயல்பட்ட புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட 4
பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.