புதுச்சேரியில் பரபரப்பு! அதிமுக நிர்வாகி கைது - மாநிலம் முழுவதும் கடையடைப்பு

Puducherry Puducherry Police
By Thahir Dec 28, 2022 03:55 AM GMT
Report

தனி மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கடையடைப்பு போராட்டம் 

யூனியன் பிரதேசமாக இருக்கும் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அண்மையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி இது தொடர்பாக பேசியிருந்தார். 

இதன் பின்னர் இந்த விவகாரம் என்பது சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக சார்பில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்ப்பட்டுள்ளது. கடையடைப்பு போராட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை.

aiadmk-executive-arrest-shop-closure-in-puducherry

அதிமுக நிர்வாகி கைது

கடையடைப்பு போராட்டத்தை தடுக்கும் வகையில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் காலை கைது செய்தனர்.

வழக்கம் போல் இன்று காலை எப்போதும் போல் கடைகள், பாலகங்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன.

தனியார் பேருந்துகள் குறைந்த அளவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்கு இயக்கப்படவில்லை.

இதனால் புதுச்சேரி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. வெளியூர் மற்றும் பணிக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.