நாகரிகம் பற்றி ஸ்டாலினுக்கு பாடம் எடுங்கள் - கொந்தளித்த ஜெயக்குமார்
அரசியல் நாகரிகம் பற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கு பாடம் எடுக்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அவரது தலைவருக்கு முதலில் கற்றுத் தருவாரா? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஓராண்டு கால விடியா ஆட்சியில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுவதை ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் சுட்டிக் காட்டும் போதெல்லாம், இந்த விடியா அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகளை ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த பின்னும் கூட, முறையான நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை
ஆகவே “ஊருக்குத்தான் உபதேசம்” என்ற கொள்கையை விட்டுவிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு உபதேசம் செய்வதை விட, அரசு விழாக்களிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், தனிப்பட்ட முறையிலும், நாகரீகமாக பேசுவது மற்றும் நடந்துகொள்வது எப்படி என்பது குறித்து.அவருடைய கட்சித் தலைவருக்கு பாடம் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு நாகரீகமான, ஆரோக்கியமான, கண்ணியமான அரசியலை முன்னெடுக்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.