அதிமுக தலைமை மாற்றமா? முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பரபரப்பு பேச்சு
அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவில் சில மாற்றம் செய்யவேண்டியதும்,

கட்சியை வளர்க்கவேண்டியதும் அவசியமாக உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி,
புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்றும், தலைமையை நம்பி அதிமுக இல்லை; தொண்டனை நம்பியே உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் பல்வேறு அரசியல் விமர்சகர்களும் விமர்சித்து வருகின்றனர்
முறையான தலைமை இல்லாதது அந்த கட்சிக்கு பெரிய குறையாக பார்க்கப்படுவதாகவும் மேலும் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம் பெற்றதாலும் பெரிய தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.