எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அவசர செயற்குழு கூட்டம்

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Apr 16, 2023 03:12 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழுக்கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அவசர செயற்குழு கூட்டம் | Aiadmk Emergency Working Committee Crowd

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்.13-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் அவசர செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.