தமாகா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜி.கே. வாசன், கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், தற்போது வரை 12 தொகுதிகள் வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திரு.வி.க.நகர்
பட்டுக்கோட்டை
ஈரோடு கிழக்கு
லால்குடி
தூத்துக்குடி
கிள்ளியூர்