அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் - உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam Madras High Court
By Thahir Mar 28, 2023 03:12 AM GMT
Report

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு 

அதிமுக பொதுகுழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொதுச்செயலார் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் , ஜேடிசி பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

aiadmk-election-high-court-verdict-today

இந்த வழக்கில் தேர்தலை நடத்தி கொள்ளலாம் ஆனால், நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த முடிவுகளை வெளியிடலாம் என குறிப்பிட்டு, அடுத்தகட்ட விசாரணையில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி குமரேஷ் பாபு கேட்டுக்கொண்டார்.

இன்று தீர்ப்பு 

கடந்த 22ஆம் தேதி 7 மணிநேரம் ஒரே நாளில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு பதிவு செய்துகொண்ட நீதிபதி குமரேஷ் பாபு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார்.

இதனை தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்புக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளிவரும் என கூறபடுகிறது .