திமுக- அதிமுக போல மாஸ் காட்டும் மக்கள் நீதி மய்யம்

election tamilnadu dmk aiadmk
By Jon Mar 10, 2021 01:53 PM GMT
Report

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் மோத தயாராகும் நிலையில் மூன்றாவது கூட்டணியாக கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணியாக கமல் தலமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது நாம் அறிந்ததே.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகளும் ஐஜேகே கட்சிக்கு 40 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 154 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம், போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இன்று அதிமுக மற்றும் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.