‘‘எங்கள் தொகுதியை பாஜகவுக்கு கொடுக்க முடியாது” போராட்டம் நடத்தும் அதிமுக எங்கு தெரியுமா?
கோவை தெற்கு தொகுதியை அதிமுகவிற்கு வழங்க்ககோரி ,கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈட்டுபட்டனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியை அதிமுகவிற்கு வழங்க கோரி கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தெற்கு தொகுதியை அதிமுகாவுக்கு வழங்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அதிமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு போதிய தொகுதியினை அதிமுக ஒதுக்கவில்லை என சர்ச்சையான நிலையில்.
தற்போது கோவையில் அதிமுக கட்சியினரே ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக போராட்டம் நடத்துவது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.