அதிமுக - திமுகவினர் மோதல் - 3 வேன்கள் தீ வைத்து எரிப்பு : திமுக ஊராட்சிமன்ற தலைவர் கைது
தூத்துக்குடியில், அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் ஏற்பட்ட மோதலில் தனியாருக்கு சொந்தமான 3 வேன்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் திமுக ஊராட்சிமன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாஸ். இவர் அதிமுக பிரமுகரின் நெருங்கிய உறவினராவார்.
இவர் தனது வேனை அதிமுக பிரச்சாரங்களுக்கு அனுப்பி வைத்து வந்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, திமுகவைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் தாஸை தாக்கி விட்டு, அவருடைய 3 வேன்களுக்கும் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

இந்த தாக்குதலில் காயமடைந்த தாஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து காவல் துறையில் அவர் அளித்த புகாரை அடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஜெவீரபுரத்தின் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.