அதிமுக பாஜக கூட்டணி ஓடாத இன்ஜின்: யார் கூறியது தெரியுமா?
திமுக தங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக மார்க்சிஸ்ட் கம்யூ. இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு போதுமானதாக இல்லை எனகூறினார்.
மேலும், இன்று மாலை நடைபெறும் மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய பாலகிருஷ்ணன் .
அதிமுக பாஜக கூட்டணி காயலாங்கடை இன்ஜின் அது ஓடாது. அக்குவேரா ஆணிவேரா கழண்டு போய் இருக்கு என விமர்சனம் செய்தார்.