மூன்று தொகுதிகளில் நேருக்கு நேர் நேர் களம் காணும் பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகள்
பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக 3 தொகுதிகளில் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் வருகிற மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு தலா 23 மற்றும் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது பாமக வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்ற பட்டியல் அண்மையில் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் – பாமக நேருக்கு நேர் போட்டியிடவுள்ளது. காங்கிரஸ் கட்சி சோளிங்கர், விருத்தாசலம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் பாமகவுடன் மோதவுள்ளது. கருத்துக்கணிப்பின்படி மேற்கண்ட இரு தொகுதிகளில் பாமகவுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது.