ஒரே பெண்ணை வைத்து மாறி மாறி விளம்பரம் செய்த அதிமுக - திமுக கட்சியினர்
டிஜிட்டல் விளம்பரத்தில் அதிமுக மற்றும் திமுக காட்சிகள் ஒரே பெண்ணை வைத்து விளம்பரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும், அந்த கட்சியின் தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தலைவர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்து வந்தாலும், தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளங்கள் வாயிலாகவும் நடக்கும் டிஜிட்டல் பிரசாரம் அதி தீவிரம் அடைந்து வருகிறது.
அந்த வகையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து போஸ்டர்கள் தயாரித்து வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர்களின் மூலம் இரண்டு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.