அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தமளிக்கிறது - வானதி சீனிவாசன்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகள் கூட்டணி அமைப்பதாக இருந்தது. ஆனால் இரு கட்சிகள் இடையே நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் தேமுதிக தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இரு கட்சிகளும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.