ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ஏப்ரல் 7 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறவிக்கப்பட்டுள்ளது.
ஒற்லை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வெற்றி கண்டுள்ளார்.

தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
தற்பொழுது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த மனுக்களின் விசாரணை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் வரும் 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.