திடீர் உடல்நலக்குறைவு : அப்பல்லோவில் சி.வி சண்முகம் அனுமதி

ADMK
By Luxshan Jun 23, 2023 03:50 AM GMT
Report

முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்பி விமான சிவி சண்முகம் திடீரென உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உளளது.

சி.வி சண்முகம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என போராட்டத்தில் சி.வி. சண்முகம் கலந்து கொண்டார் என்பதும் அதன் பிறகு அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்தார்.

திடீர் உடல்நலக்குறைவு : அப்பல்லோவில் சி.வி சண்முகம் அனுமதி | Aiadmk Cv Shanmugam Admitted Apollo Hospital

மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரும் எம்பியும் ஆன சிவி சண்முகத்திற்கு திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.  சி.வி.சண்முகம் எம்.பி உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மருத்துவமனை தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.