அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரி சோதனை

councilor income tax T. Nagar
By Jon Mar 29, 2021 12:52 PM GMT
Report

சென்னை தியாகராயர் நகரில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சின்னையா என்ற அந்த நிர்வாகி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை அதிகாரிகள் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சோதனையில் பணம் எதுவும் சிக்காத நிலையில்,தேர்தல் செலவுகள் தொடர்பான ஒரு சில ஆவணங்களை மட்டும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்‍.