தேர்தல் நேரத்துல ஏன் இப்படி பண்றீங்க...வழிப்பறியில் ஈடுப்பட்ட அதிமுக பிரமுகர் புழல் சிறையில் அடைப்பு
கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.
தனியார் கம்பனியில் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் அயப்பாக்கம் செல்லும் போது இயற்கை உபாதை கழிக்க அண்ணனூர் மேம்பாலம் கீழ் சென்றுள்ளார்.
அங்கு மது அறிந்து கொண்டு இருந்த இருவர் சந்தோஷை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்து இருந்த 3 சவரன் தங்க செயின் பறித்துக்கொண்டு தப்பினர்.
இது குறித்து சந்தோஷ் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட திருமுல்லைவாயிலை சேர்ந்த கிருஷ்ணகாந்த் மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் பிரவீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மூன்று சவரன் தங்க செயினை மீட்ட காவல்துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.