மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு..!

AIADMK
By Thahir May 25, 2022 05:27 PM GMT
Report

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜுன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தி.மு.க. 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு தஞ்சை கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகிய 3 பேர் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 

இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்,முதுகுளத்துார் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் பெயரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு..! | Aiadmk Candidates Name Announcement