அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஓபிஎஸ் மகனுக்கு சீட் இல்லை!...

political Panneerselvam aiadmk
By Jon Mar 10, 2021 03:21 PM GMT
Report

அதிமுகவில் முக்கிய வேட்பாளர்களுக்கு இந்த முறை சீட் அளிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. அந்த வகையில் அமைச்சர்கள் நிலோஃபர் கபில், வளர்மதி ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தோப்பு வெங்கடாசலம், செம்மலை ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல விருப்பமனு தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் அவர்களது பெயரும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாததும் குறிப்பிடத்தக்கது.