எட்டு கை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அதிமுக வேட்பாளர்
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், வேட்பாளர் பீளமேடு புதூர் பகுதியில் உள்ள எட்டு கை மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபடி மக்களிடம் வாக்குகளைச் சேகரித்தார். கோவை சிங்காநல்லூர் பகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் கே.ஆர் ஜெயராமன், இவர் இன்று பீளமேடு, அதன் சுற்று வட்டார பகுதியில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், பீளமேடு புதூர் பகுதியில் வாக்கு சேகரிக்க வருகை புரிந்த வேட்பாளருக்கு அந்த பகுதி மக்கள், ஆரத்தி எடுத்து உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய வேட்பாளர், அந்த பகுதியில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற எட்டு கை மாரியம்மன் கோவிலில் நேராக சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீங்கள் இந்த பகுதியில் அடைந்த துன்பங்களுக்கெல்லாம் விடிவுகாலம் வந்துவிட்டது.
ஏப்ரல் 6ம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்கு தான் உங்களின் வாழ்க்கையை மாற்ற போகின்றதாக தெரிவித்துள்ளார்.