பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக வேட்பாளரை கொலை செய்ய முயற்சி: பரபரப்பான சம்பவம்
பெரம்பூர் தொகுதி வேட்பாளரான என்.ஆர்.தனபாலன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது நபர் ஒருவர் அரிவாளால் வெட்ட முயன்றதால் பரபரப்பானது. சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அக்கட்யின் தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார்.
வீதி, வீதியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், நேற்று வியாசர்பாடி உதய சூரியன் நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயற்சித்தார், இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தனபாலன் சற்று விலக, அருகிலிருந்த அதிமுக நிர்வாகி சிவக்குமாருக்கு வெட்டு விழுந்தது.
உடனடியாக சிவகுமாரை மீட்ட தொண்டர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால் இந்த புகாருக்கு திமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.