சீமானை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்?
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி, ஒரே நேரத்தில் 234 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அதிரடி காட்டினார் சீமான். கடந்த தேர்தலை போன்று இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும் முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிய சீமான், தற்போது திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஒருவரை வீழ்த்துவதை விட தொகுதி மக்களின் நலனே முக்கியம் எனவும் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது, இதில் திருவொற்றியூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ-வும், திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளருமான K. குப்பன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.