மூதாட்டியிடம் ஓலை நெய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

people vote aiadmk straw
By Jon Mar 26, 2021 12:05 PM GMT
Report

குடியாத்தம் அதிமுக வேட்பாளர் பரிதா மூதாட்டியிடம் அமர்ந்து ஓலைப் நெய்து வாக்கு சேகரித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதனூர் ஒன்றியத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ளன.

அங்கு, அதிமுக மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சோமலாபுரம், கொம்மேஷ்வரம், சாத்தம்பாக்கம், நரியம்பட்டு, உமராபாத், கடாம்பூர், சின்னவரிகம் பெரியவரிகம், துத்திப்பட்டு தேவலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வேட்பாளர் பரிதா வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இஸ்லாமிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் பரிதா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர் மற்றும் வாஷிங் மெஷின் மாதந்தோறும் குடும்ப பெண்மணிகளுக்கு 1500 ரூபாய் மற்றும் முதியோர் உதவித்தொகை ஆயிரத்திலிருந்து 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிக்கை அதிமுக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் சோமலாபுரம் பகுதியில் அங்குள்ள குடிசையில் மூதாட்டி ஓலை நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது அவருடன் வேட்பாளர் பரிதா அமர்ந்து ஓலை நெய்துக்கொண்டே வாக்கு சேகரித்தார். அவரிடம் அதிமுக அரசால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் திட்டங்களை விளக்கி கூறினார்.