”கண்டா வர சொல்லுங்க” பாடல் மூலம் வித்தியாசமான பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர்!
நடிகர் தனுஷின் கர்ணன் பட பாடல் மூலம் வித்தியாசமான முறையில் திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது அந்த பிரச்சாரம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏ.வுமான விஜயகுமார், நடகர் தனுஷின் கர்ணன் பட பாடல் மூலமாக தனது படத்தினை சித்தரித்து சமூக வலைதளங்கள் வாயிலாக வித்தியாசமான முறையில் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.