"ஓட்டு போட்ட போடு இல்லனா போடாத" வாக்காளரிடம் கொதித்தெழுந்த அதிமுக வேட்பாளர்
வேப்பனஹள்ளி தொகுதியில் பிரசாரம் செய்த கே.பி.முனுசாமி 'ஓட்டு போடாத போய்யா' என, கொதித்தெழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கொம்மேப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவு, கே.பி.முனுசாமி வேனில் பிரசாரம் செய்தார். அப்போது, அங்கு ஆண் ஒருவர், கேள்வி எழுப்பி, அவரை, இறங்கி வந்து மக்களுடன் பேசுங்கள், என்றார். இதனால் கடுப்பான கே.பி.முனுசாமி, அவரை பார்த்து, ''இருயா, பேசுறேன் கேளுயா, என்னமோ அதிகாரம் பண்ற, ஓட்டு போடு அல்லது போடாத. கேள்வி கேட்க உனக்கு உரிமை இருக்கு ஆனால், என்னை இறங்கி வந்து பேசுன்னு சொல்ற நீ. பத்து பேருடன் நின்று பேசினால், உன்னை விட்டுட்டு போயிடுவேன் என நினைச்சியா.
உனக்கு பதில் சொல்றேன் வா,'' என, கூறினார். அப்போது விடுங்கள் என மக்கள் கூற, அதனை கேட்காத அவர் கோபத்தின் உச்சத்துக்கே சென்று அந்த வாக்காளரிடம் கடுமையாக பேசியனார்.
இதனால், அவரது பேச்சை கேட்க வந்த மக்கள், அவர் மீது அதிருப்தி அடைந்தனர். தேர்தல் பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில், வேட்பாளருக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம். இவ்வாறு கடுமையாக பேசிய கே.பி .முனுசாமி இறுதியில் ஓட்டு போட வேண்டாம் என கூறியது, அ.தி.மு.க., வாக்குகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.