ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

Tamil nadu ADMK AIADMK Erode
By Thahir Feb 01, 2023 04:07 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் அறிவிப்பு 

அதன் படி அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என்று பழனிசாமி அறிவித்துள்ளார். 1988 ஆம் ஆண்டு ஈரோடு நகர அதிமுக செயலாளராக இருந்தவர் தென்னரசு.

மேலும் இவர் 1992 ஆம் ஆண்டு ஈரோடு நகர இணைச் செயலாளராகவும் , 1995 ஆம் ஆண்டு நகர செயலாளராகவும் பணியாற்றினார்.

AIADMK candidate announcement

தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ள இவர் முன்னாள் எம்ஏல்வாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.