போட்ட ப்ளான் மிஸ் ஆயிடுச்சே..! அதிமுக அறிவித்த போராட்டம் ரத்து

M K Stalin Government of Tamil Nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Dec 29, 2022 03:04 AM GMT
Report

அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து 

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்ததையடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

AIADMK canceled protest

முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படுமென விடியா திமுக அரசு அறிவித்துள்ளது, கழகத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.’ என பதிவிடப்பட்டுள்ளது.