அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்றது

election party dmk congress
By Jon Mar 02, 2021 03:11 PM GMT
Report

அதிமுக - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உடன்பாட்டை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே. சிங், தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி, மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் சில முக்கிய நிர்வாகிகள் பசுமைவழிச்சாலை சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

தொடர்ந்து, துணை முதல்வர் ஓபிஎஸ் உடனும் பா.ஜ.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. இன்று மாலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.