அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான பரபரப்பு செய்தி

party dmk congress
By Jon Mar 02, 2021 02:24 PM GMT
Report

சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, துணை முதல்வர் ஓபிஎஸையும் சந்தித்துள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, சி.டி. ரவி ,எல்.முருகன், வி.கே. சிங் உள்ளிட்டோர் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த முடிவு எடுக்கபட்டதாக கூறப்படுகிறது.