எல்லாத்தையும் கேட்டுவிட்டு அப்படியே செல்வதற்கு அதிமுக அடிமைக்கட்சி கிடையாது : இபிஎஸ் பரபரப்பு பேட்டி
அதிமுக அடிமைக்கட்சி கிடையாது என எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடிபழனிச்சாமி
டெல்லியில் பாஜக தேசியத்தலைசர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயதியாளர்களை சந்தித்தார்
அதிமுக பாஜக
அப்போது பேசிய எடப்பாடியார் : அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எங்களுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த நினைக்கின்றனர். எல்லாத்தையும் கேட்டுவிட்டு அப்படியே செல்வதற்கு அதிமுக அடிமைக்கட்சி கிடையாது எனக் கூறிய பழனிச்சாமி .

சதி செய்கின்றனர்
பாஜகவையும், அதிமுகவையும் திட்டமிட்டு பிரிக்க நினைக்கின்றனர். தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அதிமுக விவகாரத்தில் தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதிமுகவும், இரட்டை இலையும் சின்னமும் எங்கள் பக்கம் தான் உள்ளன. நீதிமன்றமும் தெளிவாக்க சொல்லியுள்ளது எனக் கூறினார். மேலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பரவும் ஆடியோ விவகாரத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
நிதி அமைச்சர் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும், முறையான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறினார். ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை கூறவில்லை, அதிமுக ஆட்சியில் அனைத்தையும் சிறப்பாக கையாண்டுள்ளோம். அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை என விளக்கமளித்தார்.