அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்தகாலமாக மாறும் - ஓபிஎஸ்
அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்தகாலமாக மாறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு
கடந்த மாதம் ஜுலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்தை ஈபிஎஸ் தரப்பு கூட்டியது.
இந்த கூட்டத்திற்கு தன்னிடம் ஒப்புதல் வாங்கவில்லை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது அவர் உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவு வழங்க ஆணையிட்டது.
மீண்டும் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வந்தது.ஆனால் ஓபிஎஸ் தரப்பு நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.
ஓபிஎஸ்-க்கு ஆதராக வந்த தீர்ப்பு
இந்த வழக்கினை கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விசாரித்து வந்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஜெயசந்திரன். அவரின் அளித்த தீர்ப்பில் அதிமுகவில் ஜுன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்டத்தை கூட்ட வேண்டும் ஈபிஎஸ்-ஐ பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது.
வரும் காலம் வசந்தகாலம் - ஓபிஎஸ்

பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்தகாலமாக மாறும் என தெரிவித்துள்ளார்.