சிங்கப்பெண் அதிரடிப்படை ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் - அதிமுக கடும் விமர்சனம்

Vijay Tamil nadu ADMK Edappadi K. Palaniswami TVK
By Vinoja Jun 10, 2026 07:40 AM GMT
Report

சிங்கப்பெண் அதிரடிப்படையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கியது குறித்து அதிமுக ஐ.டி. விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் கமாண்டோ படை மற்றும் அம்மா Patrol உள்ளிட்ட திட்டங்களின் அம்சங்களை ஒன்றிணைத்து, அதற்கு "சிங்கப்பெண் படை" என்ற புதிய பெயர் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படை ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் - அதிமுக கடும் விமர்சனம் | Aiadmk Attacks Singa Penne Task Force

மேலும், போதைப்பொருளே பெண்களுக்கு எதிரான குற்றங்களின் முக்கிய காரணம் என்றும், அதனை ஒழிப்பது கடினம் என்றும் முதலமைச்சர் கூறிய நிலையில், அப்புறம் எதுக்கு ப்ரோ இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை?

பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருள் பிரச்சினையை தீர்க்காமல், புதிய சிறப்புப்படையை உருவாக்குவது முரண்பாடான நடவடிக்கை என்றும், காவல்துறையை விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் விமர்சித்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் ஒழிப்பில் அரசு உறுதியான இலக்குடன் செயல்படாமல், "தனிமனித ஒழுக்கம்" குறித்து பேசுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் அரசியல் எனவும், தற்போதைய ஆட்சி "Reels ஆட்சி" போன்று செயல்படுகிறது எனவும் அதிமுக ஐ.டி. விங் தெரிவித்துள்ளது.