சொல்றதை கேக்குறீங்களா சீட்டை விட்டு எழுந்த சபாநாயகர் : சட்டப்பேரவையில் பரபரப்பு
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
புறக்கணித்த எடப்பாடி அணி
இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு தற்போது வருகை தந்துள்ளனர். சட்டசபை காலை 10 மணிக்கு கூட உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சபாநாயகர் அப்பாவு வை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தற்போது சந்தித்துள்ளனர். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்துள்ளனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து சபாநாயகர் அப்பாவு-வை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளனர்.
ஈபிஎஸ் அணியினர் வெளிநடப்பு
இந்த நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் க்கு அருகருகே இருக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்க்கு பதிலாக உதயக்குமாரை நியமிக்க வேண்டும் என பேரவை தலைவருடன் விவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்பதால் பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டிய நிலையில் செல்வதை கேக்குறீங்களா சீட்டை விட்டு சபாநாயகர் எழுந்து விளக்கமளித்த நிலையில்அதிமுகவின் ஈபிஎஸ் அணியினர் வெளிநடப்பு செய்து, சட்டப்பேரவை வாசலில் நின்று கோஷமிட்டனர்.