அதிமுக கூட்டணி முறிவு: விஜய்காந்த் அடுத்து என்ன செய்யப்போகிறார்?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக இன்று அறிவித்துள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொகுதி உடன்படிக்கை எட்டாத நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக தேமுதிக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட முடிவை அறிவிப்போம் என சுதீஷ் தெரிவித்திருந்தார். தேமுதிகவிற்கு அடுத்த என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை பலரும் யூகிக்கத் தொடங்கியிருக்கின்றனர். திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்வதற்கான வாய்ப்பு இல்லை, இந்நிலையில் தங்களது கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யம் தேமுதிக-வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், கூட்டணி குறித்து பேசுவதற்காக விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஸ் ஆகியோரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் டிடிவி உடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தலாம் என சொல்லப்படுகிறது.