அதிமுக செயல்வீரர் கூட்டம் திடீர் ரத்து
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தலைமையில் நடக்கவிருந்த செயல்வீரர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் புதன்கிழமை இரவு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அதிமுகவினர் மீண்டும் கட்சியில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை இணைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சசிகலா,டிடிவி தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.சையதுகான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெறவிருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.