நாக்கின் நிறத்தை வைத்தே சுகர், பக்கவாதத்தை கண்டறியலாம் - ஆராய்ச்சி தகவல்!

Australia Diabetes
By Sumathi Aug 14, 2024 07:14 AM GMT
Report

மனித நாக்கின் நிறத்தை வைத்து நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணிக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இமேஜிங் சிஸ்டம்

ஆஸ்திரேலியா, மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்டியு) மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து புதிய இமேஜிங் சிஸ்டம் ஒன்றை வடிவமைத்துள்ளன.

நாக்கின் நிறத்தை வைத்தே சுகர், பக்கவாதத்தை கண்டறியலாம் - ஆராய்ச்சி தகவல்! | Ai Model Detect Diseases Taking A Photo Of Tongue

தொடர்ந்து இதுகுறித்து பேசியுள்ள இணைப் பேராசிரியர் அலி அல்-நாஜி, மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நீரிழிவு,பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை 98 சதவீதம் துல்லியத்தன்மையுடன் கணிக்கலாம்.

இமேஜிங் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாயிலாக 20 சென்டிமீட்டர் தூரத்தில் இருந்து நோயாளியின் நாக்கை படம்பிடித்து அதன் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய முடியும். அந்த முடிவுகளின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, ஆஸ்துமா, கல்லீரல், பித்தப்பை பிரச்சினை,

அரிசியை ஊறவைத்து சமைப்பீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..

அரிசியை ஊறவைத்து சமைப்பீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..

நாக்கின் நிறம்

பிற வாஸ்குலர் பாதிப்புகள், இரைப்பைகுடல் நோய்கள், நீரிழிவு, பக்கவாதம், கோவிட் ஆகியவற்றை எளிதாக கண்டறிய முடியும். இதன் வாயிலாக அறியப்படும் முடிவுகள் 98 சதவீதம் துல்லியமானவையாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நாக்கின் நிறம் மஞ்சளாக இருக்கும்.

நாக்கின் நிறத்தை வைத்தே சுகர், பக்கவாதத்தை கண்டறியலாம் - ஆராய்ச்சி தகவல்! | Ai Model Detect Diseases Taking A Photo Of Tongue

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கு ஊதா நிறத்திலும், அடர்த்தியான வழுவழுப்பு(க்ரீஸ் கோட்டிங்) பூச்சுடனும் காணப்படும். பக்கவாத நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒருவருக்கு நாக்கு வெள்ளையாக இருந்தால் அது ரத்தசோகையை குறிக்கும்.

நாக்கின் நிறத்தை வைத்தே சுகர், பக்கவாதத்தை கண்டறியலாம் - ஆராய்ச்சி தகவல்! | Ai Model Detect Diseases Taking A Photo Of Tongue

அதேநேரம், மிக ஆழமான சிவப்பு நிற நாக்கு கோவிட்டையும், வயலட்நிற நாக்கு வாஸ்குலர் அல்லதுஇரைப்பை அல்லது குடல் பிரச்சினை அல்லது ஆஸ்துமாவை குறிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.