அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் இதுதான் - ரசிகர்கள் வரவேற்பு
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரை மார்ச் மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக அகமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் இணைக்கப்படவுள்ளன. இதனால் வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது.
ரூ.5,625 கோடிக்கு அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் குழுமம் ஏலம் எடுத்துள்ளது. அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், சுப்மன் கில் ஆகிய 3 பேரை அந்த அணி தக்க வைத்துள்ளது. அந்த அணிக்கு முன்னாள் வீரர் அஷிஸ் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பலமான சிந்தனை கொண்டவர்கள் என்பதை குறிக்கும் வகையில் “அகமதாபாத் டைடான்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. அணியின் லோகோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.