வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், பாண்ட்யாவை ஏலத்தில் எடுக்கும் ஐபிஎல் அணி இதுதானா? - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை முன்னிட்டு நடைபெறவுள்ள வீரர்களுக்கான மெகா ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டிகளில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் சேர்த்து இந்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதற்கேற்ப புதிய 2 அணிகளுக்கான ஏலம் நடத்தப்பட்டு அதில் அஹமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களின் தலைமையில் இரு அணிகள் வாங்கப்பட்டுள்ளன.
இதனிடையே இந்த இரண்டு புதிய அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் முன்பாக எடுக்கப் போகிறார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்கள் அணியில் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம் என்கிற அடிப்படையில் அவர்களின் பட்டியலை வெளியிட்டது.
அதேசமயம் மெகா ஏலத்திற்கு முன்பாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இவ்விரு அணிகளும் 3 வீரர்களை நேரடியாக வாங்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அஹமதாபாத் அணி 3 முக்கிய வீரர்களை டார்கெட் செய்து உள்ளது.
அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வார்னர் மற்றும் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹர்டிக் பாண்டியா ஆகியோரை அகமதாபாத் அணி ஏலத்திற்கு முன்னதாக எடுக்கவுள்ளதாகவும், கேப்டன் பதவி வழங்கப்படாததால் டெல்லி அணியில் இருந்து தானாக முன்வந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாகவும் மெகா ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.