ஐபிஎல் அணிக்கு கேப்டனாகிறார் ஹர்திக் பாண்ட்யா? - பெரும் எதிர்பார்ப்பில் கிரிக்கெட் உலகம்
ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான மெகா ஏலம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் அகமதாபாத் அணியின் முடிவு ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் தான் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக்கூறப்பட்ட நிலையில் திடீரென ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளால் தத்தளித்து வந்த டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர் தான். ஆனால் கேப்டன்சி விவகாரத்தில் அந்த அணி ரிஷப் பண்டை முன்னிறுத்தியதால் அதிருப்தியில் அங்கிருந்து வெளியேறினார்.
மேலும் டெல்லி அணியை பழிவாங்க அகமதாபாத் அணியில் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு கேப்டனாக செயல்பட திட்டமிட்டிருந்தார். ஆனால் 3 முக்கிய காரணங்களுக்காக பாண்ட்யாவை கேப்டனாக்க முடிவு செய்துள்ளனர். \
முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் நிறைய அனுபவம் உள்ளவர். 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை அணிக்காக அனைத்து இக்கட்டான சூழல்களிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர். எனவே இப்படிபட்டவரை அணியில் வைத்துக்கொள்ளவே புதிதாக வரும் அணி விரும்பும். இதே போல சாம்பியன் அணியான மும்பையை சமாளிக்க வேண்டும் என்றால் அதனை நன்கு புரிந்து வைத்துள்ள பாண்ட்யா தேவை. இதே போல தோனியுடன் அதிக நேரத்தை பாண்ட்யா செலவிட்டுள்ளதால் சிஎஸ்கேவை பற்றியும் பாண்ட்யாவுக்கு நன்றாக தெரிவது கூடுதல் பலம்.
ஐபிஎல் தொடரில் பல்வேறு இந்திய ஆல்ரவுண்டர்கள் இருக்கும் போதிலும், யாரும் ஹர்திக் பாண்ட்யா அளவிற்கு பேட்டிங்கில் அதிரடியையும், பவுலிங்கில் முக்கிய திருப்புமுணையையும் ஏற்படுத்துவதில்லை. எனவே அவரை கேப்டனாக நியமித்தால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே தனது தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அதேபோல் குஜராத் மாநிலம் பாண்ட்யாவின் சொந்த ஊராகும். இங்குள்ள உருவாகும் அணிக்கு அவரை கேப்டனாக நியமித்தால் ரசிகர்கள் வரவேெற்பார்கள் என அகமதாபாத் அணி திட்டம் தீட்டி வருகிறது.