காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயி ... கடுப்பில் நீதிமன்றம் செய்த செயல்
மகாராஷ்ட்ராவில் பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்திய விவசாயிக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் சதாரா மாவட்டத்திலுள்ள நந்த்காவ்ன் கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் ராம்ராவ் பாட்டீல் என்ற விவசாயி தனது பண்ணையில் கரும்புகளை தீ வைத்து எரித்ததாக இந்திய வனச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டது.
பலத்த காற்று காரணமாக இந்த தீ அருகில் இருந்த வனப்பகுதிக்கும் பரவியது. இதன் காரணமாக காட்டில் இருந்த பனியன், பீப்பல், செனகாலியா கேட்சு (கைர்), வேம்பு, கஞ்சன் மற்றும் கரஞ்சா (மில்லட்டியா பின்னேட்டா) என 1,622 முழுமையாக வளர்ந்த மரங்கள் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதைத் தவிர பெரிய நிலப்பரப்பில் உள்ள புற்களும் சேதமடைந்துள்ளன. சுபாஷிடம் நடைபெற்ற விசாரணையின் போது கராட் தாலுகாவில் உள்ள முதல் வகுப்பு கோர்ட் முன்பு தனது தவறை ஒப்புக்கொண்டார். ஆனால் காட்டுத்தீயை ஏற்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும், தவறுதலாக தீ பரவிவிட்டது என்றும் அவர் வாதிட்டார். இதையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 1000 மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் மகாராஷ்ட்ரா மாநிலம் மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.